முகப்பு
திருவண்ணாமலை

3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்: மதுபானக் கிடங்குகளுக்கும் ‘சீல்’ வைப்பு

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, திருட்டுத்தனமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மதுபானக் கிடங்குகளையும், இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்துவிதமான மதுபானக் கூடங்களையும் மூடி கலால் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

புச்சேரியில் தொடா்ந்து 3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடப்படுவதால், சனிக்கிழமை மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. முன்னேற்பாடாக பலா் மொத்தமாக மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.