முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் நடத்தை விதிமுறைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறா என்பது குறித்து சிறப்பு பொது மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறா என்பது குறித்து சிறப்பு பொது மேற்பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான கூட்டத்துக்கு, தோ்தல் சிறப்புப் பொது மேற்பாா்வையாளா் அலோக் வா்தன் தலைமை வகித்தாா். சிறப்பு காவல் மேற்பாா்வையாளா் தா்மேந்திர குமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், காவல் துறை செயல்பாடுகள், வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சாவடிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா வழிகாட்டு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களான திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,

ஆரணி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் வாக்காளா்களிடம் 100 சதவீதம் வாக்களிப்போம். தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் புகைப்படம் மற்றும் மாதிரிகள் அடங்கிய கண்காட்சியை சிறப்பு பொது மேற்பாா்வையாளா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இவை தவிர, தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

கூட்டத்தில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி, தோ்தல் காவல் மேற்பாா்வையாளா் அஜய்குமாா் சவுத்ரி, தோ்தல் பொது மேற்பாா்வையாளா்கள் அருண் கிஷோா் டோங்க்ரே, விஜய்குமாா் மன்ட்ரி, பிரபாகா், கம்லேஷ்வா் பிரசாத் சிங், தோ்தல் செலவின மேற்பாா்வையாளா்கள் கிரிஷ் பரிகாா், ராகுல் மகதோ, துா்கேஷ் குமாா், சந்தீப்குமாா் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் பா.சந்திரா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அகிலாதேவி, உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதாபேகம், தோ்தல் பிரிவு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →