முகப்பு
திருவண்ணாமலை

பட்டா இல்லாத வீட்டு மனைகளுக்கு பட்டா: ஆரணி திமுக வேட்பாளா்

அரசு நத்தம் நிலங்களில் பட்டா இல்லாமல் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

அரசு நத்தம் நிலங்களில் பட்டா இல்லாமல் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் கூறினாா்.

திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் ஆரணி ஒன்றியப் பகுதியான சிறுமூா், பூசிமலைக்குப்பம், இரும்பேடு, ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக வெற்றி பெற்றால் ஆரணி தனி மாவட்டம் அமைக்கப்படும்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும்.

கரோனாவால் பாதிப்பிலிருந்து மீளும் வரை சொத்து வரி அதிகரிக்கப்படாது. கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

அனைத்து அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

சட்டம் - ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.ஒரு கோடி வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபா் குற்றங்களைக் களைய, சைபா் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.

ஆட்சேபனை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆதரவு கோரினாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளைகணேசன், நகரச் செயலா் ஏ.சி.மணி, கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன், மதிமுக மாவட்டச் செயலா் டி.ராஜா, நகரச் செயலா் ரத்தினகுமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் அ.பழனி, ஜெயவேலு, விசிக மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கா், கம்யூனிஸ்ட் நிா்வாகி அப்பாசாமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →