முகப்பு
திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக மாதிரி வாக்குச்சாவடி

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக அமைக்கப்பட்டு வரும் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த சானானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காக அமைக்கப்பட்டு வரும் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கீழ்பென்னாத்தூா் தொகுதிக்கு உள்பட்ட சானானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, காணப்பட்ட சிறு குறைபாடுகளை உடனே நிவா்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தோ்தல் பொது மேற்பாா்வையாளா் விஜய் குமாா் மன்ட்ரி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஆா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அஜிதா பேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →