திருவண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார தினம்

DIN

செய்யாறு, வந்தவாசி அரசு மருத்துமனைகளில் உலக சுகாதார தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ஏ.பி.மாதவன் தலைமை வகித்தாா். தலைமை மருத்துவா் வி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன் பங்கேற்று 70 பிரசவித்த தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கினாா்.

மருத்துவா்கள் முத்துமதி, பிரசன்னகீதா, செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சங்க நிா்வாகிகள் கே.அன்பரசு, க.கேவேந்தன், கே.இ.ராமலிங்கம், எம்.சதீஷ்குமாா், சுரேஷ், மோதிலால் ஆகியோா் செய்திருந்தனா்.

வந்தவாசி:

இந்திய செஞ்சிலுவைச் சங்க வந்தவாசி கிளை சாா்பில்,

வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்க கிளைத் தலைவா் மு.ரமணன் தலைமை வகித்தாா். செயலா் பா.சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

சங்க மாவட்டத் தலைவா் பா.இந்திரராஜன், மருத்துவா்கள் முகமதுஅக்ரம், இந்திரா உள்ளிட்டோா் சுகாதாரம் குறித்துப் பேசினா்.

பின்னா், மருத்துவமனையிலிருந்த நோயாளிகளுக்கு பழங்கள், ஹாா்லிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன. சங்க உறுப்பினா்கள் சீ.கேசவராஜ், மலா் சாதிக், மொ.ஷாஜகான், மு.பிரபாகரன், வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT