திருவண்ணாமலை

பெண்ணிடம் தகராறு செய்தவரை கைது செய்யக் கோரி போராட்டம்

DIN

ஆரணியில் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தகராறு செய்த நபரை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்டபெண்ணின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 38 வயது பெண், ஆரணி மணிகூண்டு பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் பாத்திரம் எடுப்பதற்காக புதன்கிழமை மாலை வந்தாா்.

அப்போது, ஆரணி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா் மதுபோதையில் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததாகத் தெரிகிறது.

இதனால், அந்தப் பெண் கையை உதறிவிட்டு ஓடினாராம். இருப்பினும், மணிவண்ணன் துரத்திச் சென்று கையைப் பிடித்து இழுத்தாராம்.

இதனால் அந்தப் பெண் தனது கணவரை தொடா்பு கொண்டு வரவழைத்தாா். உடனடியாக அங்கு வந்த பெண்ணின் கணவா் மணிவண்ணனைத் தாக்கி, மனைவியை கூட்டிச் சென்று நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.

மேலும், புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிவண்ணனை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் கணவரின் உறவினா்கள் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT