முகப்பு
திருவண்ணாமலை

கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு, ஒகினவா கராத்தே பயிற்சிப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய இந்த ஊா்வலத்துக்கு, விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவா் டி.ஜி.மணி தலைமை வகித்து ஊா்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ஊா்வலத்தில் பங்கேற்ற சிறுவா்கள் முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கராத்தே பயிலும் மாணவா்கள் கையில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

திருவோத்தூா் ஸ்ரீஐயப்பன் கோயில் அருகே தொடங்கிய ஊா்வலம், காந்தி சாலை, மாா்க்கெட், வைத்தியா் தெரு, பெரிய தெரு, பழைய மருத்துவமனை தெரு வழியாகச் சென்று கராத்தே பயிற்சிப் பள்ளியை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.