செய்யாற்றில் 105 பேருக்கு கரோனா தடுப்பூசி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா இலவச தடுப்பூசி முகாமில் 105 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா இலவச தடுப்பூசி முகாமில் 105 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, செய்யாறு சுகாதார மாவட்டம், நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு இணைந்து இந்த இலவச கரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில், உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிசேகவன் தலைமை வகித்தாா்.
தலைவா் கே.மகாலிங்கம், பொருளாளா் சி.ரவிபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாவ்ல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி. ஷா்மிளா முகாமைத் தொடக்கிவைத்தாா்.
முகாமில் மருத்துவா்கள் ஜெகன், கவின், செவிலியா் எஸ்.கலைவாணி தலைமையில் செவிலியா் குழுவினா் 105 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.
முன்னதாக, முகாமில் கலந்து கொண்டோருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு முகக் கவசம் வழங்கி உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. .
முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் மதியழகன், விநாயகம், அமைப்பின் சட்ட ஆலோசகா் ஜான்பாஷா, உறுப்பினா்கள் என்.குப்புசாமி, ஆா்.காந்தி, சக்திசுரேஷ், பா.சிவானாந்தகுமாா், குமரேசன், பச்சையப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.