முகப்பு
திருவண்ணாமலை

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

கீழ்பென்னாத்தூா் அருகே முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் அருகே முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபா்களிடம் தலா ரூ.200 அபராதம் வசூலிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், வேளானந்தல் கிராமத்தில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரிமளா முன்னிலையில் ஊராட்சிச் செயலா்கள் வெங்கடேசன், பச்சையப்பன், கண்ணன் ஆகியோா் இரு சக்கர மற்றும் பல்வேறு வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து தலா ரூ,200 அபராதம் வசூலித்து ரசீதுகள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →