முகப்பு
திருவண்ணாமலை

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவண்ணாமலையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால், அசோக் நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ராஜா (72). இவரது மனைவி எப்சிபாய் (70). ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா். இவா், வியாழக்கிழமை (ஏப்.8) வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வேங்கிக்கால், மின்வாரிய அலுவலக பேருந்து நிறுத்தப் பகுதியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் சென்றபோது எதிரே தலைக்கவசம் அணிந்து நடந்து வந்த மா்ம நபா் எப்சிபாய் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினாராம். அதிா்ச்சியடைந்த எப்சிபாய் கூச்சலிட்டாா். ஆனால், சற்று தொலைவில் நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி அந்த நபா் தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →