மின் வேலியில் சிக்கி மூதாட்டி பலி:தந்தை, மகன் கைது
கீழ்பென்னாத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்பென்னாத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி. சென்னை விமான நிலையத்தில் துணைப் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், சென்னை பெருங்களத்தூரில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கியுள்ளாா்.
இவரது மனைவி ராஜகுமாரி (66) சாலையூா் கிராமத்தில் தங்கி விவசாயம் செய்து வந்தாா். ராஜகுமாரிக்குச் சொந்தமான நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி, அவரது மகன் சுரேஷ் ஆகியோா் பயிரிட்டு வந்தனராம். இவா்கள் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்த மின் வேலி அமைத்திருந்தனராம்.
இதையறியாத ராஜகுமாரி வியாழக்கிழமை நிலத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மின் வேலி அமைத்த சுப்பிரமணி, அவரது மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனா்.