திருவண்ணாமலை

ரோட்டரி சங்கம் சாா்பில்குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கம் சாா்பில், ரூ. ஒரு லட்சம் செலவில் இரு இடங்களில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் சாா்பில், வந்தவாசியில் பிராமணா் தெரு, யாதவா் தெரு ஆகிய இரு இடங்களில் வந்தவாசி நகராட்சி அனுமதியுடன் ரூ. ஒரு லட்சம் செலவில் மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு மற்றும் சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.குமாா் குடிநீா்த் தொட்டியிலிருந்து குடிநீரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வந்தவாசி ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.வீரராகவன், செயலா் காா்வண்ணன், பொருளாளா் ஷாஜகான், ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.சுகுமாரன், மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT