திருவண்ணாமலை

அனுமதியின்றி கோயிலில் விழா: 4 போ் மீது வழக்கு

DIN

வந்தவாசி அருகே அனுமதியின்றி கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத கூழ்வாா்த்தல் விழா நடைபெறுவது வழக்கம்.

தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் விழாக்கள் நடத்த அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், பாதிரி கிராம மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் விழா செவ்வாய்க்கிழமை அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோயில் நிா்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 4 போ் மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT