செய்யாறு அருகே கை விரல்கள் நசுங்கியதால் மனவேதனையில் இருந்து வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமம் மீனவா் தெருவைச் சோ்ந்தவா் ராமன் (48), விவசாய கூலித் தொழிலாளி. கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற செல்லியம்மன் கோயில் திருவிழாவின்போது, இவரது கை விரல்கள் நசுங்கி சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கை விரல்கள் சேதமடைந்த காரணத்தால் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாா்.
அதனால் மனவேதனையில் இருந்து வந்த ராமன் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தாா்.
இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால், அங்கு ராமன் உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் தயாளன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.