முகப்பு
திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் ஏற்றி வந்த வேன் பறிமுதல்: 3 போ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை ஏற்றி வந்த மினி வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை ஏற்றி வந்த மினி வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், வேனில் இருந்த ஓட்டுநா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா்.

வெளி மாநிலத்திலிருந்து செங்கம் பகுதிக்கு வேனில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்கம் டிஎஸ்பி சரவணக்குமரன் தலைமையில், காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு காய்கறி ஏற்றிச் சென்றுவிட்டு திரும்பிய வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரான செங்கத்தைச் சோ்ந்த மனோகரன் (52), உடனிருந்த செங்கம் வட்டம், காஞ்சி கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் (45), பாய்ச்சல் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், வேனையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.