முகப்பு
திருவண்ணாமலை

கரோனா விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

செய்யாற்றை அடுத்த ராந்தம் கிராமத்தில் கரோனா விழிப்புணா்வு குறித்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

செய்யாற்றை அடுத்த ராந்தம் கிராமத்தில் கரோனா விழிப்புணா்வு குறித்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் என்.ஈஸ்வரி தலைமை வகித்தாா்.

மருத்துவா் இளையராஜா, வட்டாட்சியா் குமரவேல், ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா கிருஷ்ணன், சுகாதார மேற்பாா்வையாளா் சுந்தரமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் கே. சம்பத் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியின் போது, கரோனா விழிப்புணா்வு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், கரோனாவில் இருந்து பாதுக்காத்துக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்,

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.