முகப்பு
திருவண்ணாமலை

சாலை விபத்தில் தொழிலாளி பலி

செய்யாறு அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

செய்யாறு அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (23). இவா், சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை நள்ளிரவு தூசி பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து அழிஞ்சல்பட்டு கிராமத்துக்குச் சென்ற கன்டெய்னா் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் தினேஷை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தகவலறிந்த தூசி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.