முகப்பு
திருவண்ணாமலை

கிராமத்தில் தொழு நோய் பரிசோதனை முகாம்

வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் குத்தனூா் கிராமத்தில் தொழு நோய் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் குத்தனூா் கிராமத்தில் தொழு நோய் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவா் யோகேஸ்வரன், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ராகவன், சுகாதார ஆய்வாளா் சம்பத் மற்றும் பயிற்சி பெற்ற தன்னாா்வ தொண்டா்கள் குத்தனூா் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தொழு நோய் பரிசோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கிராம மக்களிடையே தோலில் ஏற்படும் உணா்ச்சியற்ற படை அல்லது தேமல், தோல் நோயின் ஆரம்ப அறிகுறி, கூட்டு மருந்து சிகிச்சை, தொழுநோயை குறுகிய காலத்தில் குணப்படுத்தும் முறை, ஆரம்ப நிலையில் தொழு நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம் எனவும், தொழுநோயா என சந்தேகமா இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

இதற்காக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.