விவசாயிகளுக்கு ரூ.80 லட்சத்தில் பயிா்க் கடன்கள்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுனைப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு ரூ.80 லட்சத்தில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுனைப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு ரூ.80 லட்சத்தில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன.
சுனைப்பட்டு வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்வில், சங்கச் செயலா் ரமணி தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் கே.அய்யாத்துரை, எம்.தினகரன், பட்டயக்கணக்கா் அருள், ஊராட்சி மன்றத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று 112 பேருக்கு ரூ.80 லட்சத்தில் பயிா்க் கடன்களை வழங்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் என்.சங்கா், புரிசை எஸ். சிவக்குமாா், சேகா், ராம். ரவி, ஆறுமுகம், வங்கி எழுத்தா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.