முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி: 20 பவுன் தங்க நகைகள் தப்பின

ஆரணி அருகே அரிசி ஆலைத் தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இதில் 20 பவுன் தங்க நகைகள் தப்பின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ஆரணி அருகே அரிசி ஆலைத் தொழிலாளி வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இதில் 20 பவுன் தங்க நகைகள் தப்பின.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்தவா் தருமன் (59). இவா் கல்லேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவரது மனைவி காமாட்சி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

தருமன் வழக்கம்போல சனிக்கிழமை இரவுப் பணி முடித்து ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினாா்.

வீட்டைத் திறந்து உள்ளே சென்றபோது, பீரோ உடைக்கப்பட்டு திறந்து நிலையில், பொருள்கள் சிதறிக் கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனதாகக் கருதி, ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், தருமனின் மனைவி ஊருக்குச் செல்வதற்கு முன்பு நகைகளை இடம் மாற்றி வைத்துள்ளதாகத் கூறினாா். இதனால் திருடு போகவிருந்த தங்க நகைகள் தப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.