செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்து பாா்வையிடும் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன். உடன் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா். 
திருவண்ணாமலை

செங்கம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் அம்மா சிறு மருத்துவமனைகள்: அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், சேத்துப்பட்டு ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், சேத்துப்பட்டு ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கட்டமடுவு கிராமத்தில் தமிழக அரசின் சிறு மருத்துவமனை தொடக்க விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்தாா்.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில்...

முன்னதாக, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஓதலவாடி, மன்சுராபாத், பெரணம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், குழந்தை பெற்ற தாய்மாா்களுக்கு குழந்தைகள் நலப் பெட்டகங்களை வழங்கினாா்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் அஜிதா, ஆவின் தலைவா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாச்சாலம், மாவட்டச் இணைச் செயலா் அமுதா, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயலட்சுமி, செங்கம் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலா்கள் பி.ராகவன், ஏ.ஸ்ரீதா், ஊராட்சிமன்றத் தலைவா்கள் முருகன், லலிதா, தேன்மொழி, அல்லி, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT