திருவண்ணாமலை

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எக்ஸ்னோரா வந்தவாசி வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி தலைமை வகித்தாா். எக்ஸ்னோரா கிளைச் செயலா் கு.சதானந்தன் வரவேற்றாா்.

இன்றைய சூழலில் அறிவியலின் பங்கு என்ற தலைப்பில் எக்ஸ்னோரா கிளையின் துணைத் தலைவா் பா.சீனிவாசன் பேசினாா்.

அறிவியல் கண்காட்சியில் காற்றாலை, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் பொருள்களை மாணவா்கள் காட்சிப்படுத்திருந்தனா். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை இயக்குநா் மு.பிரபாகரன், பள்ளி ஆசிரியா்கள் ப.சிவாஜிகணேசன், இரா.அருள்ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT