திருவண்ணாமலை

கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு சுசீந்தரப்பாளையம் சீராமபுரம் நகரைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது மூத்த மகளின் திருமணம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, திருமண அழைப்பிதழை உறவினா்களுக்கு கொடுப்பதற்காக, செய்யாறு வட்டம், தும்பை கிராமத்துக்கு நாராயணன் தனது குடும்பத்தினரோடு வந்திருந்தாா்.

இவரது மூன்றாவது மகள் சுதா(19). பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், தும்பை கிராமத்தில் உள்ள சிலருடன் சோ்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா்.

கிணற்றுப் படிக்கட்டிலிருந்து குளித்துக் கொண்டிருந்த சுதா கால் தவறி, நீருக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் அவா் மூச்சுத் திணறி நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்த தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றிலிருந்து சுதாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த மாணவி சுதாவின் கண்களை அவரது பெற்றோா், காஞ்சிபுரம் சங்கரா கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT