பள்ளிகளைத் திறக்க கருத்துக் கேட்பு
பள்ளிகள் திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
செய்யாறு/போளூா்: பள்ளிகள் திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதற்கான கூட்டத்தில் 10, 12 வகுப்பு பயிலும் 746 மாணவிகளில் 633 மாணவிகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.
578 போ் பள்ளியை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனா்.
55 மாணவிகளின் பெற்றோா் பள்ளியை திறப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.
நிகழ்ச்சிக்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அருகாவூா்.எம். அரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் கே.வெங்கடேசன், முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவி மெய். பூங்கோதை, தலைமை ஆசிரியா் எம்.உமாமகேஸ்வரி,
போளூா்
தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில்
பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதில், பெற்றோா்கள் தங்களது கருத்தை பள்ளியின் பதிவேட்டில் பதிவு செய்தனா்.
தலைமை ஆசிரியா் சரவணன், உதவி ஆசிரியா்கள் மகேஸ்வரி, சடகோபன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.