திருவண்ணாமலை

செய்யாறு போகி சந்தையில் வியாபாரம் அமோகம்

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செய்யாற்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

வாரச் சந்தையில் காய்கறிகள், தானிய வகைகள், துணிகள், திண்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் புதிய மண்பாண்டங்கள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுக்குத் தேவையான வண்ணங்கள், கயிறு வகைகள், கிலுகிலுப்பு போன்றவை முக்கியமாக இடம் பெற்றன.

வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தையில் சுமாா் 200 கடைகள் இடம் பெறும். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் போகி சந்தையில் கூடுதலாக 100 கடைகள் இடம்பெற்றன.

அதேபோல வியாபாரமும் கூடுதலாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT