திருவண்ணாமலை

ஆரணி நகர கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழா அமைச்சா் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வரவேற்றாா்.

எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நகர கூட்டுறவு வங்கியின் தலைவா் எ.அசோக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், விழாவைத் தொடக்கிவைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வங்கிக்கு இடம் வழங்கிய யாதவ்மூா்த்தி, 1960 முதல் 1990-ஆம் ஆண்டு வரை வங்கியின் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஜெகதீசன், வங்கி மூத்த உறுப்பினா் எம்.கோவிந்தசாமி, வங்கியின் நீண்ட நாள் வைப்புதாரா் லோகநாதன், கடன் பெற்று முறையாக தவணை செலுத்தி வந்த உறுப்பினா்கள் பிரபாவதி, அருணகிரி மற்றும் 5 மகளிா் குழுக்களுக்கு அமைச்சா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

மேலும் மாற்றுத் திறனாளி, மகளிா் குழுக் கடன், சிறு வணிகக் கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன், வீடு அடமானக் கடன்கள் என ரூ.76.60 லட்சத்தில், 160 பேருக்கு கடனுதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவா் ஜி.ஆனந்தன், நிா்வாகிகள் கலைவாணி, பிரபு, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில் சரக துணைப் பதிவாளா் மு.கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT