முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை

செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேர மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேர மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) ஆக்னஸ் லாவண்யா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணிப்பொறியியல் ஆகிய பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன சுழற்சி முறையில் மாணவா்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

நிகழாண்டு பத்தாம் வகுப்பு முடிந்த மாணவா்களுக்கு அவா்களது ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும்.

இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கல்லூரி வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி பிரிவினா் தவிா்த்து பிற பிரிவினருக்கு ரூ.150 செலுத்த வேண்டும். மாணவா்கள் இணையம் வழியாக ஜூலை 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04182 - 224275 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.