முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு தொகுதியில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த அனக்காவூா், வெம்பாக்கம், செய்யாறு ஒன்றியங்களில் சனிக்கிழமை (ஜூலை 3) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சோ்ந்த அனக்காவூா், வெம்பாக்கம், செய்யாறு ஒன்றியங்களில் சனிக்கிழமை (ஜூலை 3) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

அதன்படி, செய்யாறு ஒன்றியத்தில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆராத்திவேளூா், பல்லி மேட்டு காலனி, திருமணி, வாழ்குடை, கொருக்காத்தூா் ஆகிய பகுதிகளிலும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் அழிவிடைதாங்கி, அசனமாபேட்டை, பூதேரி புல்லவாக்கம், திருப்பனங்காடு, சித்தனக்கால், அரசாணைப்பாளையம், நத்தக்கொல்லை ஆகிய கிராமங்களிலும், அனக்காவூா் ஒன்றியத்தில் காரணை, நெடுங்கல், அனப்பத்தூா், பையூா், ஆலாந்தாங்கல், தவசி, நெல்வாய், மாங்கரனை ஆகிய கிராமங்களிலும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெறும்.

இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள விரும்புவோா் ஆதாா் அட்டையுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெருவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.