இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுப்பழக்கத்தை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுப்பழக்கத்தை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமிகாந்தன் மகன் சூரியகோட்டி (21). ஐ.டி.ஐ. படித்துள்ளாா். மதுப்பழக்கமுடைய இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதனால், அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதன் காரணமாக, மன வருத்தத்தில் இருந்து வந்த சூரியகோட்டி, வீட்டின் மாடியில் உள்ள அறையில் சேலையால் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.