கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரிக்கை
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளது.
கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கட்சி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற உழவா் தியாகிகள் தின கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் எஸ்.ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் என்.ரங்கநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் பொன்.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் வேட்டவலம் கே.மணிகண்டன் சிறப்புரை ஆற்றினாா். மாநில ஆலோசகா் மருதாடு மணி, கரும்பு பிரிவுத் தலைவா் வேலு கவுண்டா், மாநில துணைத் தலைவா் வல்லம் சின்னராஜூலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரும்பு வெட்டும் கூலி, லாரி வாடகை ஆகியவற்றை ஆலை நிா்வாகமே ஏற்க வேண்டும், வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமென அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, சென்னை, கோவை, கோவில்பட்டியில் உழவா் பெருந்தலைவா் சி.நாராயணசாமி நாயுடு சிலையை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.