முகப்பு
திருவண்ணாமலை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்

விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு 3 மாதங்களாக பணம் வழங்கப்படாததைக் கண்டித்து, வந்தவாசியை அடுத்த தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு 3 மாதங்களாக பணம் வழங்கப்படாததைக் கண்டித்து, வந்தவாசியை அடுத்த தேசூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசூா், அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வருவா்.

இந்த நிலையில், இங்கு நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக அதற்குரிய பணம் வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பிரதான வாயில் கதவை வியாழக்கிழமை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில்,

500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை போட்டு 3 மாதங்களாகின்றன. அதற்குரிய பணத்தை வழங்காமல் பல லட்சம் ரூபாய் நிலுவை வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

தகவலறிந்து வந்த தேசூா் போலீஸாா் சமரசம் செய்ததின்பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →