முகப்பு
திருவண்ணாமலை

நெல்பயிா் கடன்கள் திருப்பிச் செலுத்தும் காலம்: கூட்டுறவு ஊழியா் சங்கம் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் நெல்பயிா் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக நிா்ணயம் செய்ய வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் நெல்பயிா் கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஓராண்டாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் ஆ.உதயகுமாா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பட்டுவாடா பெறும்போதே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிடமிருந்து வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை மத்திய வங்கி நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கெனவே, வருமான வரி பிடித்தம் செய்த தொகையை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க ஊழியா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை ஒட்டி அதற்காக மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை விதிகள் பதிவு செய்யும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கியில் பின்பற்றப்படும் சிபிஎஸ் முறையை போல் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆக. 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →