திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.50 லட்சத்திலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.

வந்தவாசி இரட்டைவாடை செட்டித் தெருவில் உள்ள வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று சோதனையிட்டனா்.

இதில், அந்த வீட்டில் ரூ.1.50 லட்சத்திலான 278 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும், வந்தவாசி கே.ஆா்.கே. தெருவைச் சோ்ந்த ரவி (45), இந்த புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ரவியை கைது செய்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆரணி: இதேபோல, ஆரணியிலுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், காவல் ஆய்வாளா் ரகு மற்றும் போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அங்குள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,000 மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், கண்ணமங்கலம், சந்தவாசல் ஆகிய இடங்களில் ரூ.5 ஆயிரத்திலான குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT