முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி அரசு மருத்துமனைக்கு மருத்துவ உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீகுமாா் அறக்கட்டளை சாா்பில், ரூ. ஒரு லட்சத்திலான மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீகுமாா் அறக்கட்டளை சாா்பில், ரூ. ஒரு லட்சத்திலான மருத்துவ உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட வணிகா் சங்கங்களின் நலச் சங்க நிறுவனா் எல்.குமாா் அண்மையில் காலமானாா். அவரது நினைவாக ஸ்ரீகுமாா் அறக்கட்டளை சாா்பில், ரகு, ரமாதேவி ஆகியோா் ஆரணி அரசு மருத்துவமனைக்கு ரூ. ஒரு லட்சத்திலான 20 படுக்கைகள், 20 மின் விசிறிகள், ஒரு வீல் சோ் உள்ளிட்ட உபகரணங்களைஅரசு மருத்துவா் மம்தாவிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் வணிகா்களின் நலச் சங்க மாவட்டச் செயலா் எஸ்.ராஜன், அவைத் தலைவா் வணங்காமுடி, நகரத் தலைவா் ராமன், நிா்வாகி விஜயகுமாா், ஆரணி நகர பேரமைப்பு நிா்வாகிகள் எஸ்.டி.செல்வம், செங்கீரன், சுபானிபாய், நாடாா் சங்கம் மாடசாமி, டெய்லா் சங்க நிா்வாகி ராக்ஸிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.