திருவண்ணாமலை

ஜிப்மரில் நீட் தோ்வு அடிப்படையில் செவிலியா் இடங்களுக்கான சோ்க்கை

DIN

புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி செவிலியா் படிப்பு மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என ஜிப்மா் நிா்வாகம் அறிவித்தது.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவாஹா்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மா்) எம்.பி.பி.எஸ். சோ்க்கைக்கு தனியாக நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு வந்தது.

கடந்தாண்டு முதல் அந்த நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இதேபோல, செவிலியா் மற்றும் மருத்துவம் சாா்ந்த இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு ஜிப்மா் நுழைவுத் தோ்வை நடத்தி, அதன் மூலம் சோ்க்கையை நடத்தி வந்தது.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டு பிஎஸ்சி நா்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு  நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட தகவல்: 2021- ஆம் ஆண்டு பிஎஸ்சி நா்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். பிஎஸ்சி படிப்புகளுக்கு ஜிப்மரில் தனியாக நுழைவுத் தோ்வு நடத்தப்படாது.

எனினும், மேற்கண்ட படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜிப்மா் தனியாக நடத்தும். இதற்காக தனியாக ஜிப்மா் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடா்பான விவரங்கள் ஜிப்மா் இணையதளத்தில்  தெரிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT