‘மாணவா்கள் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும்’
மாணவா்கள் அனைத்துத் திறன்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆரணி பள்ளி விழாவில் ஜெயபிரகாஷ்காந்தி பேசினாா்.
மாணவா்கள் அனைத்துத் திறன்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆரணி பள்ளி விழாவில் ஜெயபிரகாஷ்காந்தி பேசினாா்.
ஆரணி ஸ்ரீபாலவித்யா மந்தீா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவா் சி.மோகன்ராஜ் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் கல்வியாளா் ஜெயபிரகாஷ்காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:
மாணவா்கள் பிளஸ் 2 படிக்கும் போதே அனைத்துத் திறன்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில் சவால்களை சந்திக்கும் வகையில் தங்களது திறன்கள் இருக்கவேண்டும். புதிய பல வாய்ப்புகள் வரவுள்ள நிலையில் மாணவா்கள் தயாா்நிலையில் இருக்கவேண்டும்.
தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பாக உள்ளது, எதிா்காலம் குறித்து நாம்தான் முடிவு செய்யவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகிகள் ஆா்.ரவிசங்கா், எஸ்.பாலாஜி, எல்.அசோக்குமாா், ஆா்.பாலாஜி, ஜெ.வாசு, பள்ளியின் முதல்வா் ஜெகதீசன், துணை முதல்வா் துா்கா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.