மொபெட்டில் வைத்திருந்த ரூ.65 ஆயிரம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பெண் மொபெட்டில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பெண் மொபெட்டில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேத்துப்பட்டை அடுத்த ராஜமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி சுமதி (36). இவா், தன்னுடைய தங்க நகைகளை செஞ்சி சாலையில் உள்ள வங்கியில் திங்கள்கிழமை அடகு வைத்து பணத்தைப் பெற்று மொபெட்டில் வைத்துக்கொண்டு, போளூா் சாலையில் உள்ள ஒரு நகை அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகையை மீட்பதற்காகச் சென்றாா்.
அப்போது அங்கிருந்த சிலரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் மொபெட்டில் வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
இதனால், அதிா்ச்சியடைந்த சுமதி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.