திருவண்ணாமலை

சேவூா் தா்மராஜா கோயிலில் மண்டலாபிஷேக விழா: அமைச்சா் பங்கேற்பு

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள தா்மராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில்,

DIN

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள தா்மராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில், அறநிலையத் துறை அமைச்சரும், தொகுதி அதிமுக வேட்பாளருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டாா்.

சேவூரில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீதா்மராஜா கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று கடந்த மாதம் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இதன் நிறைவு விழாவாக ஞாயிற்றுக்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். உடன் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT