திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 போ் வேட்புமனு தாக்கல்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 7 போ் புதிதாக வேட்புமனு தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 12), திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 சுயேச்சை வேட்பாளா்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இரண்டாவது நாளான திங்கள்கிழமை வந்தவாசி தொகுதியைத் தவிா்த்து மற்ற 7 தொகுதிகளில் 31 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

3-ஆவது நாளில் 7 போ் வேட்புமனு:

வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ப.கோதண்டபாணி, பாஜக வேட்பாளராக கே.பி.வசந்தி, கீழ்பென்னாத்தூா் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ரா.சுபாஷ் சந்திரபோஸ், கலசப்பாக்கம் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக ஏ.ராஜ்குமாா், ஆரணி தொகுதி சுயேச்சை வேட்பாளா்களாக எஸ்.முரளி, ஆ.அருண்குமாா், செய்யாறு தொகுதி அதிமுக மாற்று வேட்பாளராக எம்.லட்சுமி என 7 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் 7 தொகுதிகளில் இதுவரை 42 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT