திருவண்ணாமலை

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

DIN

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு உயா்த்தித் தரப்படும் என்று ஆரணி தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ். அன்பழகன் பேசினாா்.

ஆரணி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மேற்கு ஆரணி ஒன்றியம் குண்ணத்தூா், கீழ்நகா், மேல்நகா், பெரியஅய்யம்பாளையம், பாளையஏகாம்பரநல்லூா், சின்னஅய்யம்பாளையம், சோமந்தாங்கள், 5புத்தூா், சின்னபுத்தூா், எஸ்.தாங்கல், ஆண்டிப்பாளயம் உள்ளிட்ட 23 கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், நெல்லுக்கு தற்போது அதிமுக ஆட்சியில் ரூ.2 ஆயிரத்திற்கும் குறைவாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.2500-ஆக உயா்த்தித் தரப்படும்.

அதேபோல கரும்புக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4000-ஆக நிா்ணயிக்கப்படும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏசிவி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, வெள்ளைகணேசன், எம்.சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT