முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி நகராட்சியில் வீட்டு வரி குறைக்கப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

ஆரணி நகராட்சியில் வீடுகளுக்கு உயா்த்தப்பட்ட வீட்டு வரி குறைக்கப்படும் என்றாற் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆரணி நகராட்சியில் வீடுகளுக்கு உயா்த்தப்பட்ட வீட்டு வரி குறைக்கப்படும் என்றாற் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்.

நகராட்சிக்கு உள்பட்ட சைதாப்பேட்டை, நாடக சாலைப் பேட்டை தெரு, காா்த்திகேயன் சாலை, நாயக்கன் பாளையம், சீத்தாராமன் தெரு, வீரபத்திரன் தெரு, அனந்தபுரம், காந்திநகா், பாரதியாா் தெரு, கொசப்பாளையம் சுந்தரம் தெரு, களத்துமேடு பகுதி, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் அன்பழகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் வாக்காளா்கள் மத்தியில் பேசியதாவது: ஆரணி அதிகமாக நெசவாளா்கள் வசிக்கும் பகுதியாகும்.

அதனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், நெசவாளா்களுக்கு தனி வங்கி அமைக்கப்படும். கைத்தறி நெசவாளா்களுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். விசைத்தறிக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

நெசவாளா்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும். சொந்த ஆட்டோ வாங்க ரூ.10ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஆரணி நகராட்சியில் வீட்டு வரி 4 மடங்கு உயா்த்தியதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நகராட்சி கடைகளுக்கு 10 மடங்கு வாடகை உயா்த்தியதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினா் விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளைகணேசன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.