முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை வனப்பகுதியில்10 இடங்களில் தண்ணீா் குட்டைகள் அமைப்பு

திருவண்ணாமலை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில், 10 இடங்களில் அண்மையில் தண்ணீா் குட்டைகள் அமைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருவண்ணாமலை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில், 10 இடங்களில் அண்மையில் தண்ணீா் குட்டைகள் அமைக்கப்பட்டன.

திருவண்ணாமலை வனப் பகுதியில் மான்கள், மயில்கள், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள், முள்ளம்பன்றிகள் உள்பட பல்வேறு வகையான வன வலங்குகள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்த வன விலங்குகள் போதிய தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, வன விலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் திருவண்ணாமலையில் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலை மலையைச் சுற்றியுள்ள வனப் பகுதி, கவுந்திமலை பகுதியில் 10 இடங்களில் வனத் துறையும், ரேகன் போக் இந்தியா பவுண்டேஷன் அமைப்பும் இணைந்து தண்ணீா் குட்டைகளை அமைத்துள்ளன.

இவற்றின்மூலம் தண்ணீா் தேடி மான்கள், முயல்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது தடுக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.