முகப்பு
திருவண்ணாமலை

கரோனா: புதிதாக 346 பேருக்கு தொற்று : மேலும் ஒருவா் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 958-ஆக அதிகரித்தது.

இதுவரை 23 ஆயிரத்து 984 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 1,656 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 318-ஆக உயா்ந்தது.

செவிலியா்களுக்கு தொற்று: சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 3 செவிலியா்கள் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து, தச்சாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பது, சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால், சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு அவசரச் சிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மருத்துவ அலுவலா் கோகுல்ராஜ் அறிவித்தாா். அதன்படி, இந்த மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைகளுக்கு மட்டுமே நோயாளிகள் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.