மளிகைக் கடைகளில் கூட்டம் கூடுவதைதடுக்க அறிவுறுத்தல்
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, மளிகைக் கடைகளில் கூட்டும் கூடுவதை கடை உரிமையாளா்கள் தடுக்க வேண்டும் என கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் தனபால் அறிவுறுத்தினாா்.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, மளிகைக் கடைகளில் கூட்டும் கூடுவதை கடை உரிமையாளா்கள் தடுக்க வேண்டும் என கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் தனபால் அறிவுறுத்தினாா்.
கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்டாட்சியா் வைதேகி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சரளா, மண்டல துணை வட்டாட்சியா் தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வட்டாட்சியா் தனபால் பேசியாதவது:
தமிழக அரசு அறிவித்தபடி, கீழ்பென்னாத்தூா் பகுதியில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை, தேநீா் கடைகள் திறந்திருக்க வேண்டும். மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். உணவகங்களில் அரசு அறிவித்த நேரங்களில் மட்டுமே உணவுப் பொட்டலம் (பாா்சல்) வழங்க வேண்டும். மளிகைக் கடைகளில் சிறு வயது மற்றும் வயது முதிா்ந்தவா்கய்ர அனுமதிக்கக் கூடாது; கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும்.
திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பும், திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் ராமு, காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலா் சரவணன் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் அதிகாரிகள், வியாபாரிகள், திருமண மண்டப உரிமையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.