முகப்பு
திருவண்ணாமலை

20,811 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது: வேளாண் இணை இயக்குநா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்துக்குத் தேவையான 20,811 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொா்ணவாரி பருவத்துக்குத் தேவையான 20,811 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் நடப்பு சொா்ணவாரி பருவத்துக்கான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது. குறிப்பாக, யூரியா 9,777 மெட்ரிக் டன், டிஏபி 1,463 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3,055 டன், சூப்பா் பாஸ்பேட் 1,356 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5,160 மெட்ரிக் டன் என்ற அளவில் இருப்பு உள்ளது.

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 2,106 மெட்ரிக் டன்னும், தனியாா் சில்லரை மொத்த விற்பனையாளா்களிடம் 18,704 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உரங்களின் விலை குறைப்பு:

மத்திய அரசின் உத்தரவின்படி டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்களின் உயா்த்தப்பட்ட விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளது.

டிஏபி ஒரு மூட்டை ரூ.1,900-ல் இருந்து ரூ.1200 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் குறைக்கப்பட்ட விலையில் தேவைக்கேற்ப உரங்களை வாங்கிப் பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா் வேளாண் இணை இயக்குநா் க.முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.