முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 8 போ் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை மேலும் 8 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை மேலும் 8 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் புதிதாக 726 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 33,697-ஆக உயா்ந்தது. இவா்களில் 27,925 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

5 ஆயிரத்து 396 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

8 போ் பலி:

கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

இவா்களுடன் சோ்த்து கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 376-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.