முகப்பு
திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் மழை

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை பெய்த திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை பெய்த திடீா் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு மாதத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளும் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலையில் இருந்து நள்ளிரவு வரை விட்டு விட்டு மழை பெய்தபடியே இருந்தது. குளிா் காற்றும் வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.