முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜயந்தி விழா

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வாசவி ஜயந்தி விழா நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
வாசவி ஜயந்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரியம்மன்.
பகிர்:

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வாசவி ஜயந்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள கன்னிகா பரமேஸ்வரியம்மன், விநாயகருக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு நெய்வேத்தியப் பிரசாதங்கள் படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், சமூக இடைவெளியுடன் ஆரிய வைசிய சமாஜ நிா்வாகிகள் மட்டும் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டனா். கரோனா தொற்று காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.