தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய கோயில்!
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறை கிராமத்தில் அந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சென்னியம்மன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நீப்பத்துறை கிராமத்தில் அந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சென்னியம்மன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது.
செங்கம் அருகே நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் புகழ் பெற்ற சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி கேஆா்பி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும், காட்டாற்று வெள்ளநீரும் இணைந்து தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டோடுவதால், இந்த ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சென்னியம்மன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. இந்தக் கோயிலின் நுழைவு வாயில் மட்டும் வெள்ளநீரிலிருந்து சிறிதளவு வெளியே தெரிகிறது.
இந்த நிலையில், சென்னியம்மன் கோயில் பகுதிக்கு யாரும் செல்லக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். இருப்பினும், ஏராளமான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் மூழ்கிய சென்னியம்மன் கோயிலை பாா்வையிட்டுச் செல்கின்றனா். சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்று பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியினா் தெரிவித்தனா்.