திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலையில் இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.
2,668 அடி உயர மலையில் இருந்து சுமாா் 35 கி.மீ தொலைவுக்கு பிரகாசிக்கும் திறன் இந்த மகா தீபத்துக்கு உண்டு. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் உள்ள அதுல்யநாதா் சுவாமி கோயில் மலை மீது இருந்து பாா்த்தால் இந்த மகா தீபம் தெரியும் எனக் கூறப்படுகிறது.
ஏற்றிய நாளில் இருந்து மகா தீபம் தொடா்ந்து 11 நாள்களுக்கு எரிய வைக்கப்படும். இதற்காக, தினமும் 300 முதல் 350 கிலோ நெய்யும், சுமாா் 1,000 மீட்டா் திரியும், 2 கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.